Flash பயிற்சி-1

6:03 PM

ஓர் உருவினை நகரச்செய்தல்

1.நேரஅலகின்(Timeline) முதலாவது புள்ளியை(Frame 1) தெரிவு செய்த பின் வேலைத்தளத்தில்(Workplace) ஓர் உருவினை வரையவும்.
(வட்டம்,சதுரம்,நட்ச்சத்திரம்)



2.நேரக்கோட்டில்(Timeline) உள்ள ஏதாவது ஓர் புள்ளியில்(உ+ம் 30 ம் புள்ளி) வலது சொடுக்கு(Rightclick) செய்து Insert keyframe ஐ இடவும்.



3.வேலைத்தளத்தில் வரைந்த உருவை வேறோர் இடத்தில் நகர்த்தி வைக்கவும்.
{நீங்கள் வரைந்த உரு கரையினை(Border) உடையதாயின் அவ்வுருவின்மேல் இரண்டுதரம் சொடுக்கியபின்(Double click) உருவினை நகர்த்தவும்.}



4.நேரக்கோட்டில் ஏதாவது ஓர் புள்ளியில் வலதுசொடுக்கிட்டு(Rightclick) Create motion tween ஐ இடவும்.







பின்பு Ctrl+Enter Keyயினை அழுத்தி நீங்கள் செய்த உருநகரலை காணலாம்.
செய்த உருநகரலை சேமிப்பதற்கு,
Fileல் சென்று Exportஐ சொடுக்கி Export movie என்பதை கொடுத்து எமக்கு விரும்பிய வகையினை(Format) தெரிவுசெய்து சேமிக்கலாம்.

Flash ஓர் அறிமுகம்

8:41 AM

Flash என்பது ஓர் உரு நகரலை(Animation) உருவாக்குவதற்கு பயன்படும் ஓர் மென்பொருள் ஆகும்.
Flash மென்பொருளை இயக்கதொடங்கியதும் கீழே காட்டியவாறு திரை காணப்படும்.



இத்திரையில் Create New எனும் பகுதியில் உள்ள Flash Document என்பதை தெரிவு செய்ய உருநகரலை செயவதற்குரிய
செய்கைத்தளம் (Work Place) தோன்றும்.



தோன்றும் திரையில் இடது பக்கத்தில் Tools என்பது காணப்படும்.
இந்த Toolகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்கைகளை ஆற்ற உதவும்.



செய்கைத்தளத்தின் மேலும் சில பகுதிகள் கீழே குறித்துக் காட்டப்பட்டுள்ளன.